தழிழர் பொருளாதாரம் அபிவிருத்தி பெற விவசாய மேலாண்மை கூட்டுப் பண்ணை மூலம் அதி உச்ச பயன்பெறுதல் கோழி வளர்ப்பு மூலம் குடும்ப பொருளாதாரம் பேனல். ஆடு வளர்ப்பு தொழிநுட்பங்கள். பால் பண்ணை மூலம் அதிகூடிய வருவாய் ஈட்டுதல்.

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை --- மூலிகைகள் கீரைகள்

Tuesday, February 20, 2018

Image result for தூதுவளைதூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.
மேலும்....

குதிகால் வெடிப்பை போக்கும் அருமையான பாட்டி வைத்தியங்கள்

Related imageபாதவெடிப்பு அசௌகரியமாகத்தான் இருக்கும். நல்ல அழகான உடையை உடுத்தி, இன்னும் முகத்தைழகுபடுத்திக்கொண்டு ஆனால் காலில் வெடிப்புடன் வெளியே சென்றால், அந்த ஒரு பிரச்சனையாலேயே மற்ற அலங்காரங்கங்கள் வீணாகிவிடும். நம்மை குறைவாகவும் மற்றவர்கள் மதிப்பிடக் கூடும். மற்றவர்கள் என்றில்லாமல் பாதவெடிப்பு நமது ஆரோக்கியம் சார்ந்த மற்றும் அக்கறை சார்ந்த விஷயமே. என்ன செய்தாலும் திரும்ப திரும்ப வருகிறதே என கவலைக் கொள்கிறீர்களா? இங்க சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன் தரும். பாதங்கள் மிருதுவாகி பளிச்சிடும் என்பது உண்மை.

தேன் மற்றும் அரிசி மாவு :
பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்

வேப்பிலை பேஸ்ட் :
கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில் கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 15 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

பப்பாளி ஸ்க்ரப் :
நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை பாலுடன் கலந்து குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் தேய்த்து கழுவுங்கள். . இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவினால் பாத வெடிப்பு நீங்கும்.

வெந்தயக் கீரை :
மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும். மேலும் கடுகு எண்ணெய் தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும்.

வாழைப்பழம் :
வாழைப் பழத்தை மசித்து உங்கள் பாதங்களில் தடவி வந்தால் வெடிப்பு மறைந்து பாதங்கள் மிருதுவாகும். பாதத்தில் உண்டாகும் சுருக்கங்கள் மறையும்.
மேலும்....

மாடுகளுக்கான இயற்கை மருத்துவம்!

Related imageஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறித்த காலத்தில் குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பது சிறந்தது. சினைப்பருவத்துக்கு வரும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இனச்சேர்க்கை செய்ய வேண்டும். 

மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது. 

மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும். 

மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்.
மேலும்....

Thursday, February 15, 2018

Image result for முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க ...........
   

   பெண்கள் பொதுவாக அழககாக இருக்கவேண்டும் என்று நினைப்பது  இயல்வு....

  பெண்களுக்கு அழகினை கெடுக்கும் கரும்புள்ளிகள் வருகின்றன.இப்பிரச்சினைக்கான தீர்வை இங்கே காண்போம்
  
                
             உருளை கிழங்கு
             
       உருளைக்கிழங்கை நறுக்கி பின் அதை அரைத்து பேஸ்டாக முகத்தில்           தடவி 15 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும்.
 
            வெந்தயக் கீரை     

         வெந்தயக் கீரையை   அரைத்து பேஸ்டாக முகத்தில் தடவி காய்ந்த பின்             கழுவவேண்டும்  தொடர்ந்து செய்து வர  நல்ல பலன் கிடைக்கும்.

           தக்காளி
   
   தக்காளியை நறுக்கி பேஸ்டாக அரைத்து  கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து பின்கழுவவேண்டும்.தொடர்ந்து இதை பின் பற்றி வர கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

 கோதுமை

  கோதுமையுடன் பால் சேர்த்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வர கரும்புள்ளிகள் விரைவில்குணமடையும்

கடலை எண்ணெய்


         கடலை எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு இரண்டையும் சம அளவு  கலந்து கரும்புள்ளியுள் இடத்தில் தடவிவர கரும்புள்ளிகள் மறைந்து விடும்.  


        

        
              
         

  .

மேலும்....

அல்சரை குணப்படுத்தும் விளாம்பழம்

Monday, February 12, 2018

Related imageநமக்கு எளிதாக கிடைக்க கூடிய மூலிகை பொருட்கள், கடை தெருவிலே கிடைக்கின்ற பொருட்கள் மற்றும் இல்லத்திலே இருக்கின்ற மளிகை பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லா இயற்கை மருந்து தயாரிப்பது மற்றும் அதன் மருத்துவ குணங்களை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மிகுந்த சத்துக்கள் நிறைந்த விளாம்பழம் பற்றி பார்க்கலாம். ‘வுட் ஆப்பிள்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் விளாம்பழத்தில் புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன. இந்த விளாம்பழம் மற்றும் அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணங்கள் உள்ளன. விளாங்காயில் பி2 உயிர்சத்தும் உள்ளது. இத்தகைய மகத்துவமுள்ள விளாம்பழத்தை பயன்படுத்தி குளிர்ச்சி தரும் தேநீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: விளாம்பழம், நாட்டு சர்க்கரை. பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் விளாம்பழம் மற்றும் ஒரு ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நீர் விட்டு கொதிக்கவிடவும். இந்த வடிகட்டிய தேநீரை பருகி வருவதால் உடல் சோர்வு, பித்த வாந்தி, மயக்கம் ஆகியவற்றை சரிசெய்கிறது. உடலுக்கு பலம் தருவதோடு குளிர்ச்சியடைய செய்கிறது. இந்த தேநீரை சூடாகவோ அல்லது குளிர்ந்த நீராகவோ அருந்துவதால் உடலில் பித்த அளவை சமன் செய்யலாம். ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாகிறது. 
வாய் துர்நாற்றத்தை போக்கும் தேநீர் தயாரிக்கலாம். தேவை
யான பொருட்கள்: விளா மர இலை, மிளகு, ஓமம், பெருங்காயப்பொடி, உப்பு. 
விளாம் மரத்தின் இலையை கழுவி கசக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கசக்கிய இலை, 5-10 மிளகு, சிறிது பெருங்காயப்பொடி, ஓமம், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். இதனை தினமும் அருந்துவதால் அல்சர், குடல் புண் ஆகியவற்றால் ஏற்படும் வாய் துர்நாற்றம், வயிற்று புண், பல்வலி, ஈறுகளில் வீக்கம், ஈறுகளில் ரத்த கசிவு ஆகியன நீங்கும்.

விளாங்காயை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாங்காய், நாட்டு சர்க்கரை, வரமிளகாய், புளி, நெய், உப்பு. பாத்திரத்தில் நெய் விட்டு உருகியதும், ஓடு நீக்கிய விளங்காய், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கவும். இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து எடுக்கவும். அனைத்து சுவையும் அடங்கியுள்ள இந்த துவையலை, தோசை, இட்லி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் எடுத்து வருவதால், வாயுவை வெளித்தள்ளுகிறது. வயிறு பொருமல், உப்பசம் உள்ளிட்ட பிரச்னைகளை சரிசெய்கிறது. 

விளாம்பழ ஓடு, வில்வம் பழம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தினால் தோல்நோய் பிரச்னையிலிருந்து விடுபடலாம். விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. இது ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெற செய்கிறது. விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசிவர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். செம்பருத்தி இலையுடன், விளாம்மர இலையினை அரைத்து தேய்ப்பதால் முடி பட்டுபோன்ற மென்மையுடன் இருக்கும். விளாம் காயை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டு வர அல்சர் முழுமையாக குணமடையும்.
மேலும்....

பிரண்டையின் பயன்கள்

Image result for பிரண்டை* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும்.
* செரிமானக் கோளாறைப் போக்கும்.
* மலச்சிக்கலை நீக்கும்.
* குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
* ஆண்மையைப் பெருக்கும்.
* கப நோய்கள் நீங்கும்.
* பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
* எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
* பிரண்டை கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.
* பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.
* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.
* பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.
* பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.
மேலும்....

நாட்டுக்கோழியில் நல்ல வருமானம்!

Monday, February 5, 2018

மிகக் குறைந்தமுதலீட்டீல்அதிக வருமானம் ஈட்ட நாட்டு கோழி வளர்ப்பு சிறந்தது
 
கிராமபுரங்களில் வீட்டுக்கு வீடு நாட்டு கோழி வளர்ப்பார்.அதையே கூடிய அக்கஐயுடன்கோழிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கினால் அதிக லாபம்பெறலாம்.இன்றைய சூழலில் நாட்டு கோழிக்கு நல்ல விலை கிடைக்கின்றது.450 சதுர அடி இருந்தால் பேதும் 10கோழி வளர்த்தால் மாதம் ரூ2500 வருமானம் ஈட்டலாம்.
          ஒரு பெட்டை கோழி ஆண்டுக்கு 3 பருவங்களில் முட்டையிடும்.ஒவ்வொருமுறையும் 15முட்டைகள்இடும்.முட்டையிடும்திகதியை வரிசையாகஎழுதிவைத்து.கடைசியாகஇட்ட9நாட்களின்முட்டைகளைஅடைவைப்பதுலாபகரம்.நல்லவளர்ச்சிபெற்றபெட்டைக்கோழியால்9முட்டைகளைஅடைகக்முடியும்.அடுப்புசாம்பல்,  ம ணல்ஆகியவற்றைக் கூடையில்நிரப்பி ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பை எற்படுத்த கரித்துண்டும்
இடியைத்தாங்க இரும்புத்துண்டும் போட்டுவைக்க வேண்டும் இந்தக் கூடையில் கோழியை அடைகாக்க செய்வதன்மூலம் 9 முட்டைகளும் பொரியும் வாய்ப்பு உள்ளது.
   
     குஞ்சுகள் பொரிந்ததும் அவற்றுக்கு முதல் வாரம் மஞ்சள் கலந்த தண்ணீர் கொடுக்க வேண்டும்.பின்னர் 3 வாரங்களுக்கு ஏதேனும் ஒரு வைட்டமீன்டானிக் கொடுக்கலாம். வாரம் ஒருமுறை அரச கால்நடைகளில் கோழிக்கு தடுப்புசிப்போடவேண்டும்.

     கோழி வளர்க்கும் இடத்தை சுற்றி 4 அடி உயரத்திற்கு  வலையால் வேலி போட வேண்டும்.வேலியோரம் கீழ்  மண்ணை குவித்து வைத்து.சிமன் உற்றினால் பிற உயிரினங்களால் பாதிப்பு ஏற்படது.வலை போட்டுள்ள பகுதியில் 3அடிக்கு3அடி என்ற அளவில் சதுரமாக 3 அடி உயரத்தில் 3குடிசை போட வேண்டும். நாட்டுக்கோழி குப்பையில் புரண்டு இறக்கையை  உதறும். இதன்மூலம் உடம்பில் இருக்கும் செல் பேன்ற உயிரினங்கள் வெளியேறும்.

     பண்ணையில் குப்பை குழிக்கு வாய்ப்பில்லை.எனவே தரையில் சாம்பல்,மணலை கலந்து வைக்கவேண்டும்.தீவனத்தொட்டி,தண்ணீர் குவளை என்பவற்றை வைக்க வேண்டும்.கோழிகளை சுகந்திரமாகத் திரிய விட வேண்டும்.
   
10கோழிளுக்கு ஒரு சேவல் என வளர்கவேண்டும்.சில கோழிகள் பறந்து வெளியே செல்லும்.அவற்றுக்கு மட்டும் ஒரு பக்க4விரல் அளவுக்கு  இறக்கையை வெட்டி விட வேண்டும். கோழிகளின் உணவுக்காக கரையான் உற்பத்தி செய்து கொடுக்கலாம். அடுப்புக்கழிவுகள்.காய்கறிகழிவுகள்,இலைகள், வீணாகும் தானியங்களை கொடுத்தால் போதும்5  மாதங்களில் ஒன்றரை   கிலே எடைக்கு வளர்ந்து விடும். நாட்டு கோழி விற்பதில் சிரமம் இல்லை விற்பது தெரிந்தால் வியாபாரிகள் தேடி வந்து வேண்டி செல்வார்.


மேலும்....

தோட்டக்கலை :: பனை

Friday, February 2, 2018

பதநீர்

பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர் ஆகும். பனையின் ஆண் மற்றும் பெண் மஞ்சரிகளில் இருந்து ‘பதநீர்’ என வழங்கப்படும் சுவை மிகு சாறு பெறப்படுகிறது. பதநீர் ஒரளவு அமிலத்தன்மையுடன் காணப்படும். பதநீர் ஒளி ஊடுருவக் கூடியதாகவும் இனிய மணம் கொண்டதாகவும் இருக்கும்.
பதநீர் விளைச்சல் மரபியல் காரணிகளை சார்ந்து காணப்பட்டாலும் பின்வரும் காரணிகளைப் பொருத்தும் மாறுபடும். பதநீர் எடுக்கும் காலத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டால் பதநீரின் தரம் குன்றும்.
  • மண்வகை மற்றும் நீர்ப்பாசன வசதிகள்
  • ஆடு கிடைபோடுதல், எரு இடுதல், உழவு உள்ளிட்ட மேலாண்மை முறைகள்
  • பனையில் மஞ்சரிகளின் அமைவிடம்
  • மிக அதிக அளவில் பதநீர் உறிஞ்சப்படுதல்
  • காற்றின் வேகம் மற்றும் உலர்தன்மை
  • மரமேறியின் கை வண்ணம்
ஒரு பாளையிலிருந்து மூன்று முதல் ஐந்து மாதங்களுக்கு பதநீர் பெறலாம். பாளைகளில் பதநீர் பெற ஏதுவாக சில ஒலைகளை வெட்டி அப்புறப்படுத்தி விட வேண்டும். பனையில் 30 விழுக்காடு வரை ஓலைகளை வெட்டுவதால் பதநீர் விளைச்சல் மற்றும் பதநீர் சுரப்புக் காலம் அதிகரிக்கும் எனக் கண்டறியப்பட்டது. பனையில் 90 விழுக்காடு ஒலைகளை வெட்டியதால் பதநீர் விளைச்சல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பனையில் பூப்பது பருவம் சார்ந்து இருப்பதால் ஏப்ரல்-சூலை வரையிலான காலகட்டத்தில் 90-130 நாட்கள் பதநீர் எடுக்கப்படுகிறது. பதநீர் சுரக்கத் தொடங்கும் ஏப்ரல் மாதத்தில் பதநீர் சுரப்பு குறைவாகவும் மே-சூன் மாதங்களில் அதிகரித்தும் சூலையில் குறைந்தும் காணப்படும்.
பெண் பனைகள் ஆண் பனைகளைக் காட்டிலும் 33-50 விழுக்காடு கூடுதல் பதநீரை அளிக்கின்றன. ஆண் பனைகளில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையும் பெண் பனைகளில் பிப்ரவரி முதல் மார்ச் வரையும் பதநீர் பெறப்பட்டாலும் டிசம்பர் முதல் ஜீன் வரையிலான காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் பதநீர் பெறப்படுகிறது.
நடவு செய்த 12 முதல் 15 ஆண்டுகளில் பனையொன்று பதநீர் எடுக்கும் நான்கு மாதங்களில் 100-200 லிட்டர் பதநீரை அளிக்கும் விதைத்த 12 ஆம் ஆண்டிலிருந்து பதநீர் கிடைத்தாலும் பதினைந்தாம் ஆண்டிலிருந்தே நிலையான விளைச்சல் கிடைக்கும் பொதுவாக பருவம் ஒன்றுக்கு பனையொன்று 100-200 லிட்டர் பதநீரை அளித்தாலும் பதினைந்தாம் ஆண்டியிலிருந்து கிடைக்கும் விளைச்சலை 100 லிட்டர்/பனை/பருவம் என எடுத்துக் கொண்டு வரவு செலவு கணக்கிடுவதே சரியான அணுகு முறையாகும். பொதுவாக பனைகளில் உரிமையாளர் 50 விழுக்காடு வருவாயையும் பனைத் தொழிலாளர் 50 விழுக்காடு வருவாயையும் பகிர்ந்து கொள்கின்றனர்.


       
ஆண்டுஆண்டொன்றுக்கு பனையொன்றுக்கு பதநீர்விளைச்சல் (லிட்டரில்)
1260
1370
1480
15100

நாளொன்றுக்கு பனையொன்று குறைந்த அளவாக ஒரு லிட்டர் அதிக அளவாக 12 லிட்டரும் பதநீர் தரும். 

தட்டுப்பாளை 
பழங்கள் உருவாகும் முதன்மைத் தண்டு பகுதியை இடுக்கி கொண்டு அழுத்தி விட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மாத வயதுடைய பழங்கள் கொண்ட பாளைகளை சீவி விட்டு பதநீர் சேகரிக்கலாம். அனைத்து நிலைகளிலும் நாள்தோறும் இருமுறை பதநீர் சேகரிக்கலாம்.
தென்கிழக்காசிய நாடுகளில் பதநீர் சேகரிக்கும் முறைகளும் சேமிப்பு கொள்கலன்களும் மாறுபடுகின்றன. தென்கிழக்காசிய நாடுகளிலும், இந்தியாவிலும் வெவ்வேறு வடிவிலான இடுக்கிகள் கொண்டு மஞ்சரிகள் அழுத்தி விடப்பட்ட பதநீர் சுரப்பு விரைவுபடுத்தப்படுகிறது. இலங்கை மற்றும் இந்தியாவல் புளிய மர வேர்களிலிருந்து பெறப்பட்ட இடுக்கிகளும் மியான்மாரில் இரும்பு அல்லது வெண்கலத்தினால் ஆன இடுக்கிகளும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கம்பூசியாவில் நாளொன்றுக்கு ஒரு முறையும் மியான்மார், இந்தோனேசியா மற்றும் ஈழம் ஆகிய நாடுகளில் நாளொன்றுக்கு இரு முறையும் பாளைகளை அழுத்தி விடுகின்றனர்.

பதநீர் பெற உதவும் கருவிகள்

உம்புறம் சுண்ணாம்பு தடவப்பட்ட மண் சட்டி

வழக்கமான பனை ஏறும் முறை

கருவியில் பனை ஏறும் முறை

பாளை சீவுதல்

பாளையில் கட்டிய மண் சட்டியில் சுண்ணாம்பு தடவுதல்

மண் சட்டியிலிருந்து நெகிழிக் குடத்தில் பதநீரை ஊற்றுதல்

அலுமினிய கலன்களில் பதநீர் சேமிப்பு
பனை ஏறும் முறைகள் 
வெப்ப மண்டல ஆப்பிரிக்காவைக் காட்டிலும் ஆசியாவில் பனையேறுதல் பரவலாகக் காணப்படுகிறது. பனையேறுவது கடினமான பணியாக இருப்பினும் உள்ளூர் தேவையைப் பொருத்து பனை ஏறுவது மாறுபடுகிறது. பனை உயரமாக வளருவதும் பனையேறுவதில் உள்ள சிரமத்துக்குக் காரணமாகும். பனை ஏறுவதில் நிலவும் இடர்ப்பாடுகளால் திறமைமிகு பனையேறுவோர் கூட பனையேறுதலைக் கைவிட்டு வருகின்றனர். பனையின் மஞ்சரியிலிருந்து பெருமளவு பதநீர் பெறுவதற்கு மரமேறியின் தொழில்நுட்பத் திறனும் உடல் வலுவும் மிகவும் இன்றியமையாதவை. நாளொன்றுக்கு மரமேறியொருவர் 25 முதல் 30 பனைகளை ஏறுவார். மரமேறி பாளைகளை சீவவதற்கு வசதியாக தண்டில் இலைக்காம்புகள் இல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மரமேறி 20-80 பனைகளை பராமரிக்கலாம்.
பனந்தொகுப்பகளில் பனைகளின் மேற்பகுதியில் கயிறுகட்டி பிணைத்து வைத்திருந்தால் மரமேறியொருவர் உதவியாளரின் துணையோடு நாளொன்றுக்கு 75 முதல் 90 பனைகளை ஏறமுடியும்.
பனைகளில் சிறு சிறு தடங்களை உருவாக்கி பனை  ஏறும் வழக்கம் இந்தோனேசியாவில் காணப்படுகிறது. மியான்மாரில் ஏணிகளைக் கொண்டு பனை ஏறியுள்ளனர். தமிழ்நாட்டிலும் குட்டையாக உள்ள பனைகளிலும் இளம் பனைகளிலும் ஏணிகளைப் பயன்படுத்தி பனை ஏறியுள்ளனர். சம உயரம் கொண்ட பனைகள் மிகுதியாகவுள்ள தோப்புகளில் மட்டுமே ஏணிகளை பயன்படுத்த இயலும். பனைகளோடு ஏணிகளை நிலையாக நிறுவுவது பயனுள்ள ஒன்றாக இருப்பினும் செலவு மிக்கதாகவும் பொருளியல் ரீதியாக இழப்பு ஏற்படுத்துவதாகவும் உள்ள ஆப்பிரிக்காவில் சாவண்ணா புல்வெளிகளில் பனைகளை சாய்த்து ஒரேயொருமுறை பதநீர் எடுத்த பிறகு அவற்றை வெட்டிவிடுகின்றனர். இதனால் பனை வகைகள் அழியும் நிலை ஏற்படுள்ளது.
தமிழ்நாட்டில் கால் கயிறு (கால்கள் இரண்டையும் பிணைப்பது) மற்றும் தாங்குகயிறு (பனையையும் மரமேறியின் முதுகையும் சுற்றி மாட்டி கொள்வது) ஆகியவற்றைக் கொண்டு பனை ஏறும் முறை பரவலாக காணப்படுகிறது. தென்னை ஏறும் கருவியில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டு பனை ஏற பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் நிதியுதவியோடு பேராசிரியர் வி.பொன்னுசாமி குழுவினரால் பனையேறும் கருவி செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம் நம்பியூர், பொள்ளாச்சி விட்டம் போடிபாளையம், கோயம்புத்தூர் புதுச்சேரி, கோல்கத்தா, சங்ககிரி, மேச்சேரி, கடையம், மத்தூர் போன்ற இடங்களில் பனையேறும்  கருவி செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.
பதநீரில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு

பனைவெல்லம் தயாரிக்க பதநீரை கொதிக்க வைத்தல்

பனஞ்சர்க்கரை தயாரிக்கும் அமைப்பு

பனஞ்சர்க்கரை

பனஞ்சர்க்கரை இனிப்புப் பண்டங்கள்

காற்றேற்றம் செய்யப்பட்ட பதநீர் தயாரிப்பு

காற்றேற்றம் செய்யப்பட்ட பதநீர்

பதநீர் பாயாசம்

பதநீர் பொங்கல்


பதநீர் பெறும் முறைகள் 
பதநீர் சுரத்தலைத் தூண்டுவதற்கு ஏதுவாக பாளைகளை தயார்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும். பொதுவாக பாளைகளின் வளர்திசுக்களை அழுத்தித் தடவி விடுவதன் மூலம் பதநீர் பெறப்படுகிறது பாளைகளை ‘V’ வடிவ இடுக்கி கொண்டு நீளவாக்கில் அழுத்துவதன் மூலம் கீழ்நோக்கி பதநீர் விழும். இது போன்று ஆறு நாட்களுக்கு செய்ய வேண்டும். முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பாளைகளை காலை 11.00 மணிக்கு முன்பாக அழுத்தி விட வேண்டும். ஆறாம் நாள்  முதல் பன்னிரண்டாம் நாள் வரை (பதநீர் சுரக்கத் தொடங்கும் வரை) ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் 2 மி.மீ. அளவு பூ மொட்டுக்களை பாளை கத்தி கொண்டு சீவி விட வேண்டும். இந்த காலகட்டத்தில் பாளைகளை காலையில் மட்டும் அழுத்தி விடுவதோடு காலை 11.00 மணிக்கு  முன்பு மாலை 4.00 மணிக்கு பிறகு என நாள்தோறும் இரு வேளைகளில் மலர் மொட்டு நுனிகளை சீவி விட வேண்டும். சாறு சொட்டத்தொடங்கியவுடன் மஞ்சரிகளை அழுத்துவதை விடுத்து நாள்தோறும் இருமுறை மஞ்சரியை சீவி விட வேண்டும்.
அகன்ற வாய் கொண்ட நீர்த்த சுண்ணாம்பு தடவிய மண் சடடிகளை சணல் அல்லது கயிறு கொண்டு பனங்கரக்குகளில் கட்டி தொங்க விட்டு பதநீரை சேமிக்கலாம். மண் சட்டிகளை நன்கு கழுவிய பிறகு உட்புறம் சுண்ணாம்பு பூச வேண்டும். பொதுவாக நீர்த்த சுண்ணாம்பு பூசப்பட்ட மண் சட்டிகளில் பதநீர் பெறப்படுவதால் கால்சியத்தின அளவு உயர்ந்து அவற்றின் தரம் கூடுகிறது. பாளையை கடைமட்டமாக 30 பாகை அளவுக்கு வளைத்து கட்டிவிடுவதன் மூலம் பதநீரை எளிதில் சேகரிக்க முடியும். மஞ்சரித் தண்டை அப்படியே விட்டுவிட்டு மலரிதழ்களில் நார் கொண்டு கட்டிவிட வேண்டும். பொதுவாக 12-15 நாட்கள் வரை பாளையில் பதநீர் சுரப்பு நிகழும் ஆரம்ப கட்டத்தில் மிகக் குறைவான பதநீரே கிடைக்கும். பதநீர் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கியவுடன் காலை, மாலை என இருவேளைகளிலும் பதநீரை சேகரிக்கலாம்.
பாளை கட்டையாகும் வரை சீவுவதைத் தொடர வேண்டும். பாளையின் காம்புப் பகுதி 10-15 செ.மீ நீளம் வரும் வரை பாளைகளை சீவி விட்டு பதநீர் சேமிக்கலாம். நுனிமொட்டுக்கள் இல்லாத நிலையில் பதநீர் சுரப்பு விரைவில் நின்றுவிடும். பதநீர் சேரிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக பதநீர் சேகரிக்கும் பாளையில் பதநீர் சுரப்பு நின்று விடுவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாக இளம் பாளைகளை பதநீர் சுரப்புக்குத் தயார் படுத்த வேண்டும். ஒரு பனையில் ஒரே நேரத்தில் ஏழு பாளைகளை சீவி விடலாம். நாட்கள் ஆக ஆக பதநீர் சுரப்பு குறையும். பாளையில் சுரக்கும் பதநீரின் மனம், எறும்புகள், தேனீக்கள் மற்றும் குளவிகள் மொய்ப்பது போன்ற அறிகுறிகளை வைத்து பதநீர் இறக்கும் நேரத்தை மரமேறி முடிவு செய்து கொள்வர்.
பொதுவாக பானைகளை மூடாமல் பதநீர் சேமிக்கப்படுவதால் பூச்சிகள் அதிகம் விழுந்து விடுகின்றன. இந்த பூச்சிகள் இறந்து விடுவதால் பதநீர் குடிப்பதற்குத் தகுதியற்றதாக மாறிவிடுகிறது. பூச்சிகளின் உடலில் காணப்படும் ஏராளமான நுண்ணுயிரிகள் பதநீரை நொதிக்கச் செய்து கெட்டுப் போக வைக்கின்றன. கொள்கலன்களின நுனியில் பாளையை நுழைத்த பிறகு விளிம்புப் பகுதிகளை காய்ந்த ஓலைகளைக் கொண்டு மூடுவதன் மூலம் பூச்சிகள் உள்ளே விழுவதைத் தவிர்க்கலாம். மண் சட்டியின் வாய் பகுதியை பாளையினுள் விட்டு மஸ்லின் துணி கொண்டு மூடி விட வேண்டும். பொதுவாக பன்னாடைகளி்ல வடிகட்டப்படும் பதநீர் அசுத்தமான பாத்திரங்கிளல் சேமித்து வைக்கப்படுகிறது. பதநீர் சேகரித்ததில் இருந்து விற்பனை செய்ய அதிக நெரம் ஆவதால் வழிமுறைகளில் பதநீர் பெறும் பொழுது நிலவும் இடர்பாடுகளை களைவது அவசியமாகிறது. சுகாதாரமான உயர் வருவாய் தரும் நவீன முறைகளைக் கடைபிடிப்பது மிகுந்த பயனை அளிக்கும்.
பதநீர் சேகரிப்பு முறைகள் மற்றும் பதநீர் சேமிப்பு கொள்கலன்கள் மட்டுமே நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. இலங்கையில் பாளைகளில் வயது மற்றும் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு பதநீர் இறக்கம் முறைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அரிப்பனை முறை 
இரண்டு வார வயதுடைய இளம் ஆண் பாளைகளிலிருந்து பதநீர் எடுக்கப்படுகிறது. மஞ்சரியின் வெளிப்புற உறைகளை நீக்கி அப்படியே மூன்று நாட்களுக்கு காய விட்டு பாளைகளை அழுத்தாமல் விட வேண்டும். நாள்தோறும் பாளையை சீவி விடுவதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு லிட்டர் வீதம் ஒன்று முதல் ஒன்றரை மாதங்களுக்கு பதநீர் பெறலாம்.
வள்ளுபனை 
ஒரு மாத வயதுடைய ஆண் பாளைகளின் மஞ்சரிகளை அழுத்தி விட வேண்டும். மூன்று முதல் ஆறு மலர்களுக்கு ஒரு சட்டி வீதம் பானை ஒன்றுக்கு 2-4 சட்டிகளைத் தொங்கவிட்டு பதநீரை சேமிக்க வேண்டும். பெண் பாளைகளில் ஆறு மாதங்களுக்கு மேல் பதநீர் எடுக்கலாம்.
பதநீர் சேமிப்பு 
பனையிலிருந்து இறக்கியவுடன் பதநீரை குடித்து விடுவது நல்லது. பதநீரில் சுக்ரோஸ் அதிக அளவு காணப்படுவதால் விரைவில் நொதித்து விடும். இலங்கையின் யாழ்குடா நாட்டிலும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும் சுட்ட சுண்ணாம்பின் நீர் பதநீர் சேகரிக்கத் தொங்க விடப்பட்டுள்ள மண் பானைகளின் உட்புறம் தடவப்படுகிறது. இதன் மூலம் நொதித்தல் தடுக்கப்படுகிறது. கலப்படமற்ற பதநீரில் சுண்ணாம்பு கலந்திருப்பினும் பதநீர் பருகலாம். சுண்ணாம்பு சேர்ப்பதால் சுவை கூடுகிறது. இவ்வாறு பெறப்படும் பதநீரைக் காய்ச்சி பெறப்படும் வெல்லத்தின் நிறம் கருமையாகக் காணப்படும். சட்டிகளை நன்கு கழுவுவதன் மூலமும் லிட்டருக்கு 1.25 கிராம் என்ற அளவில் சுண்ணாம்புக் கரைசலைச் சேர்ப்பதன் மூலமும் நொதித்தலைத் தாமதப்படுத்த முடியும்.
வேதிச் சேர்மங்களைப் பயன்படுத்தி பதநீர் சேமிப்பு காலத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதநீரை 15 நிமிடம் கொதிக்க வைத்து பொட்டாசியம் மெட்டாபை சல்பைட் சேர்ந்தால் சுவை நன்றாக இருப்பதோடு அறை வெப்பநிலையில் 3 மணி நேரம் வரை சேமித்த வைக்கலாம். பதநீரை 25 நிமிடம் கொதிக்க வைத்து பொட்டாசியம் மெட்டாபை சல்பைட் சேர்ப்பதால் சுவை கூட்டி 6 மணி நேரம் வரை சேமித்து வைக்கலாம். சல்பானிலமைடு, சல்பர்டை ஆக்ஸைடு ஏற்றப்பட்ட சிலிக்காஜெல், பாலுடிரின், குளிர்வித்த சிட்ரிக் அமிலம் (0.2 விழுக்காடு) + சோடியம் பென்சோயேட் (0.02 விழுக்காடு) கலவை போன்றவற்றைச் சேர்த்து நொதித்தலைத் தாமதப்படுத்தி அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க முடியும்.
நொதித்தலுக்கு காரணமான ஈஸ்ட்டுகள் முற்றிலும் அழிக்கப்படாவிட்டாலும் கண்ணாடிக் கலன்களில் அடைப்பதற்கு முன்பாக குளிர்விக்கப்பட்டு சேமிக்கப்படுவதால் 10-15 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம். பதநீரை சூடுபடுத்தாமல் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் 6 மணி நேரத்தில் கெட்டுவிடும். தூசுகளற்ற பதநீருடன் லிட்டருக்கு 200 மிலி கிராம் என்ற அளவில் பொட்டாசியம் மெட்டா பைசல்பைட் சேர்த்து அறை வெப்பநிலையில் 8 மணி நேரம் சேமித்து வைக்கலாம். தூசுகள் நீக்கப்பட்ட பதநீரை 800 செ வெப்பநிலையில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு அறை வெப்ப நிலையில் வைத்திருந்தால் 36 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். குளிரூட்டப்பட்ட சூழலில் எவ்வித தரக்குறைபாடும் இன்றி 15 நாட்கள் வரை பதநீரை சேமித்து வைக்கலாம். மேலும் பதநீரை 88-900 செ வெப்பநிலையில் 30 விநாடிகள் கொதிக்க வைத்து சேமித்தால் அறை வெப்பநிலையில் 18 மணி நேரம் சேமித்து வைக்கலாம். இவ்வாறு சேமிக்கும் பொழுது சுவை மாறாதிருந்த போதும் மணம் சற்று குறையும்.
சென்னயைில் தமிழ்நாடு பனைவெல்லம் தயாரிப்போர் கூட்டமைப்பில் பதநீரை வடிகட்டி, 30-400 பாரன்ஹீட் வெப்பநிலையில் 24 மணி நேரம் குளிர்வித்து 200 மிலி கொள்ளளவு கொண்ட பாலித்தீன் பைகளில் மூடி முத்திரையிட்டு சேமித்து வைக்கப்படுகிறது.
பதநீரை கொள்கலன்களில் அடைத்தல் 
பதநீர் வெவ்வேறு கொள்கலன்களில் சேமித்து வைக்கப்பட்டு பிறகு தேவைக்கு ஏற்றவாறு பதன் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா, ஈழம், மியான்மார், வியட்நாம் போன்ற நாடுகளில் பதநீர் சேமிக்க மண்பானைகளை பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் பதநீர் சேமிக்க சுரைக் குடுவைகளும் பயன்படுத்தப்படுகின்றன. பதநீரை தீச்சுடரில் 25 நிமிடம் கொதிக்க வைத்து பெறப்படும் சாறுடன் சிறிதளவு பொட்டாசியம் மெட்டா பை சல்பைட் மற்றும் உணவு நிறமி (வெளிர் சிவப்பு) ஆகியவற்றை சேர்த்து பாலி எத்திலீன் கலன்களில் அடைத்து வைக்கலாம். இதை குளிரூட்டப்பட்ட சூழலில் 3 நாட்கள் வரை வைத்திருந்தாலும் சுவை, நிறம் மற்றும் மணம் மாறுவதில்லை.
பதநீரில் இருந்து பெறப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் (கருப்பட்டி அல்லது பனைவெல்லம் 
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பனையிலிருந்து பதநீர் இறக்கி வெல்லம் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், வேலூர், தஞ்சாவூர், தருமபுரி, கிருட்டிணகிரி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
“பதநீரைத் தேனுக்கு ஒப்பான இனிய வெல்லமாக மாற்ற முடியும். இவ்வெல்லம் கரும்பு வெல்லத்தை விடச் சிறந்தது. கரும்பு வெல்லம் இனிமையானது. ஆனால் பனைவெல்லமோ இனிப்பும், அதைவிட சுவையும் உடையது. இதில் பல உலோக உப்புகள் உள்ளன. மருத்துவர்கள் என்னிடம் வெல்லம் சாப்பிடச் சொன்னார்கள். அதனால் நான் எப்பொழுதும் பனை வெல்லமே சாப்பிடுகிறேன். ஆலைகளில் கூட உற்பத்தி செய்ய முடியாத முறையில் இயற்கை, இந்தப் பொருளை உண்டாக்கியிருக்கிறது. இவ்வெல்ல உற்பத்தி குடிசைகளிலே நடைபெறுகிறது. பனைகள் உள்ள இடங்களில் இதை எளிதில் உற்பத்தி செய்யலாம். ஆந்திராவில் ஆயிரக்கணக்கான பனைகள் உள்ளன. அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் இவ்வெல்லம் தயார் செய்யப்படுகிறது. இந்த நாட்டிலிருந்து ஏழ்மையை விரட்ட இது ஒரு வழி. இது ஏழ்மைக்கு மாற்று மருந்தாகவும் அமையும்.
- மகாத்மா காந்தி
நடுவண் பனை வெல்லம் மற்றும் பனை பொருட்கள் நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இது தவிர மராட்டிய மாநிலம் தகானு என்னுமிடத்தில் செயல் விளக்க நடுவமும் கேரள மாநிலம் பாலக்காட்டில் விரிவாக்க நடுவமும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பனைத் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
பனையிலிருந்து சேகரிக்கப்பட்ட பதநீரை வடிகட்டி தூய்மைப்படுத்த வேண்டும். மண் அடுக்குகளை அமைத்து அவற்றின் மேல் அலுமினிய கொப்பரைகளை வைத்து அதில் பதநீர் ஊற்றப்பட்டு கொதிக்க வைக்கப்படுகிறது. வெப்பநிலை 1100 செ ஆக இருக்கும் போது அதனுடன் ஆமணக்கு விதையைத் தூளாக்கி இட்டு மிகையாக வேகும் திறனை குறைக்க வேண்டும். பதநீரில் உள்ள நீர்த்த சுண்ணாம்பின் அளவை சமன் செய்ய ஏதுவாக சூப்பர் பாஸ்பேட் அல்லது பாஸ்பாரிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. இந்நீர்மத்தை தொடர்ந்து கலக்கி விடுவதன் மூலம் கொப்பரைகளின் அடியில் வீழ்படிவு ஏற்படுவது தவிர்க்கப்படும். குளிர்ந்த நீரில் பாகு கடின நிலையை அடைந்தால் வெல்லம் உருவாகிவிட்டது என்பதை அறியலாம். நன்கு கொதித்து பசைபோல் மாறி கம்பி பதத்திற்கு வந்தவுடன் கொதிக்க வைப்பதை நிறுத்தி சிறிய மண்சட்டிகளிலோ தேங்காய் தொட்டிகளிலோ அறை வெப்பநிலையில் பாகை ஊற்றி குளிர்விக்கலாம். பாகு குளிர்ந்து கெட்டியானவுடன் தொட்டிகளிலிருந்து பழுப்பு நிறம் கொண்ட வெல்லம் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் பனை வெல்லம் சேமிப்பின் பொழுது கருப்பு நிறமாக மாற்றமுறுகிறது. இருந்த போதிலும் 0.05 விழுக்காடு பொட்டாசியம் மெட்டாபை சல்பைட் சேர்க்கும்பொழுது தரம் மேம்படுவதோடு பனைவெல்லம் கருமையாவது தவிர்க்கப்படுகிறது. 
நூறு கிலோ பதநீரில் இருந்து 7-8 கிலோ பனை வெல்லமும் 8 கிலோ வெல்லப் பாகுக் கழிவும் பெறலாம். படிகமாக்கப்பட்ட பனை வெல்லம் கரும்பிலிருந்து பெறப்படும் நாட்டுச் சர்க்கரையை ஒத்ததாக இருக்கும்.
நவீன முறையில் பனைவெல்லம் தயாரித்தல் 
நாட்டுப்புற முறையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பனை வெல்லத்தை சேமித்து வைத்தால் கருப்பு நிறமாக மாறி விடுகிறது. நுகர்வோரிடையே ஈர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் பனை வெல்லம் தயாரிப்பது இன்றியமையாத ஒன்றாகும். புதிதாகப் பெறப்பட்ட பதநீரை 30 வினாடிகள் கொதிக்க வைத்த பிறகு குளிர்விக்க வேண்டும். இதனை கொதிக்க வைத்து பெறப்படும் பனை வெல்லத்தின் நிறம், மணம் மற்றும் சுவை போன்றவை நுகர்வோரால் விரும்பத்தக்க ஒன்றாக உள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு பனைவெல்லம் தயாரிப்போர் கூட்டமைப்பின் சார்பில் கண்ணாடிக் கலன்களில் அடைத்து வைக்கப்பட்ட மென் பானங்கள், சாக்கலேட் பொதிகள், மிட்டாய், ஆப்பிள் பழக்கூழ், கலப்பு பழக்கூழ் மற்றும் பனைப்பாகு போன்றவை பனைவெல்லம் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
(பனங்கற்கண்டு 
பதநீரை சுத்தமாக வடிகட்டி 22 முதல் 24 வரை காஜ் தடிமன் உள்ள அலுமினிய பாத்திரத்தில் இட்டு காய்ச்சும் பொழுது சிறிதளவு சூப்பர் பாஸ்பேட்டைச் சேர்க்கவும். சமச்சீரான வேகும் நிலையை அடைந்தவுடன் இதை எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறவைத்த கலவையை காடா துணியில் வடிகட்டி அதன் அடியில் தேங்கியுள்ள தேவையற்ற தூசுக்களை அகற்ற வேண்டும். வடிகட்டிய நீர்மத்தை மீண்டும் 1100 செ வெப்பநிலையில் 1 ½  முதல் 2 மணி நேரம் தேன் போன்ற தன்மையை அடையும் வரை காய்ச்சவும். பிறகு இக்கலவையை ஆறவைத்து துகளாக்கும் கருவியில் ஊற்ற வேண்டும். இம்முறையில் வெப்பநிலையை சரியான முறையில் பராமரித்தால் மட்டுமே சரியான முறையில் துகளாகும். பிறகு துகளாக்கும் கருவியின் வாய்ப்பகுதியை மூடி மணல் படுக்கையில் புதைத்து வைக்க வேண்டும். புதைக்கப்பட்ட நாளில் இருந்து 40 முதல் 60 ஆவது நாளில் துகள்களாகத் தொடங்கும். முதிர்ந்த துகள்கள் ஒவ்வொன்றும் 50 முதல் 100 கிராம் எடையுடன் அறுகோண வடிவில் இருக்கும். முழுமையடைந்த துகள்கள் அனைத்தையும் அகற்றி, தூய்மைப்படுத்தி காயவைத்து சேமிக்கவும்.
(பனைத்தேன் 
வடிகட்டிய பதநீரை துருப்பிடிக்காத வாணலியில் இட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சுவதற்கு பாரம்பரிய முறையையே பின்பற்ற வேண்டும். வேகமாக கொதிப்பதைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெய் சில துளிகள் விட வேண்டும். தேன் போன்ற தன்மையை அடைய 2 முதல் 2½ மணி நேரம் ஆகும். இச்சாற்றினை மண் சட்டிக்கு மாற்ற வேண்டும். பழுத்த, காய்ந்த மேல்தோடு அகற்றிய விதை நீக்கப்பட்ட புளியம்பழத்தை பழக்காம்புடன் இச்சாற்றினை சேர்த்து மண்சட்டியில் ஊற்ற வேண்டும். ஒரு கிலோ புளியம்பழம் 10 லிட்டர் சாறுடன் சேர்க்க போதுமானது. உலர்ந்த இடத்தில் 130 முதல் 180 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். சர்க்கரைத் துகள்கள் அனைத்தும் புளியம்பழத்தின் மேல் பகுதியில் ஒட்டிக்கொண்டு இப்பழத்தை சுவையுள்ளதாக மாற்றிவிடும். நன்றாக முதிர்நத பனைத்தேன் சாதாரண தேன் போன்ற சுவை மற்றும் நிறத்துடன் இருக்கும். இதனை உலர்பழமாகவும், அடுமனைப் பொருட்கள், இட்லி, தோசை, பனிக்கூழ் மற்றும் பச்சைக் காய்கறிகள் உடன் தொட்டுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.
(பனஞ்சர்க்கரை 
பனை வளரும் பகுதிகளில் கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக பனஞ்சர்க்கரை பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. முறையாக பனைகளை வளர்த்தால், கரும்புச் சர்க்கரையோடு போட்டிபோடும் அளவுக்கு பனஞ்சர்க்கரையை உற்பத்தி செய்ய இயலும். பதநீரை ஆவியாகும் வரை காய்ச்சி குளிர்விப்பதன் மூலம் பனஞ்சர்க்கரை படிகங்களை பெறலாம். சர்க்கரைப் பாகை நீக்கிய பிறகு பனைவெல்லத்தில் இருந்தும் பனஞ்சர்க்கரை பெறலாம்.
(பதநீர் கோவா 
தேவையான பொருட்கள் : பதநீர் – 1.5 லிட்டர், பால் 2.0 லிட்டர், ஏலக்காய்ப்பொடி –சிறிதளவு, முந்திரிப் பருப்பு – 50 கிராம் 
செய்முறை 
முதலில் பாலை காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். இதில் பதநீரை சேர்த்து கோவா பதத்திற்கு கடினமாகி வரும்வரை காய்ச்சவும். இந்நிலையில் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துவிடவும்.  இப்போது கோவாவை எண்ணெய் பூசிய தட்டுகளில் பரப்பி அதன்மீது முந்திரிப்பருப்புகளை தூவி விடவும். இதை கடினமாகும் வரை வைத்திருந்து பிறகு சிறுசிறு துண்டுகளாக தேவைக்கேற்ப அமைப்பில் வெட்டிக் கொள்ளலாம்.
(பதநீர் பொங்கல் 
தேவையான பொருட்கள் 
பதநீர் – 2 லிட்டர், பச்சரிசி – 200 கிராம், பனைவெல்லம் – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, முந்திரிப்பருப்பு – 20 கிராம் 
செய்முறை 
முதலில் அரிசியை நன்றாக ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி பதநீருடன் வேகவைத்து அதனுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான பதநீர் பொங்கல் பெறலாம்.
(பதநீர் பாயாசம் 
தேவையான பொருட்கள் : பதநீர் – 2 லிட்டர், பாசிபருப்பு -100 கிராம், ஏலக்காய்த்தூள் – 1 கிராம் 
செய்முறை 
பதநீரை குறைந்த தணலில் வைத்து 20 நிமிடம் கொதிக்கவிடவும். இதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கி பரிமாறவும். 
(பாம்கோலா 
காற்றோட்டம் செய்யப்பட்ட கோலா மென்நீரை 11 விழுக்காடு பனஞ்சர்க்கரை + சிட்ரிக் அமிலம் மற்றும் உணவு நிறமிகளைச் சேர்த்துத் தயாரிக்கலாம். நாகர் கோவிலுக்கு சுமார் 30 கி.மீ மேற்கே உள்ள மார்த்தாண்டத்தில் உள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டு கூட்டமைப்பின் சார்பில் எலுமிச்சை மணம் கொண்ட பதநீர் “பால்மோலா” என்னும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
(ஆண்பாளை 
பதநீர் இறக்காவிடில் ஆண்பாளை நீண்ட தனித்தனியான விரல்களைக் கொண்டு வளரும். நன்கு முற்றிக் காய்ந்த பின் சேகரிக்கப்பட்டு சுண்ணாம்புச் சூளை, செங்கற் சூளைகளுக்கு எரிபொருளாய் பயன்படுகிறது.

பன்னாடை 
சல்லடை போன்ற பன்னாடையை மறைவுக்காகத் தட்டிகள் செய்ய பயன்படுத்துகின்றனர். அதாவது ஓலை வேய்வது போல் பன்னாடையை அடுக்கி மறைவுத்தட்டிகள் வேய்ந்து கொள்கின்றனர். பன்னாடையை கிராமவாசிகள் பதநீர் வடிகட்டிகளாகவும் பயன்படுத்துகின்றனர். இதைக்கொண்டு வடிகட்டும் பொழுது பெரிய தூசு துரும்புகள் மேலே தங்கிக் கொள்ளும். பதநீர் மட்டும் கீழே வடியும்
மேலும்....

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

எருமை வளர்ப்பு

வாசனைப் பயிர்கள்

காளான் அறுவடை

மண்புழு உற்பத்தி

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

மகளீர் பக்கம்