வாகன விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு....

Friday, August 21, 2020


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் வயது (16) என்பவரே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும்....

ஜனாதிபதி பிரகடன உரையில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலை - இரா.சாணக்கியன்


கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து கருத்து வெளியிடாமை கவலையளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று (20) இடம்பெற்ற நிலையில், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பாகவோ, 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமை சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு ஒன்று இல்லாவிட்டால் தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் என்பதை தமிழ் மக்கள் மனதில் வைத்து இனிவரும் காலங்களில் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்..

மேலும்....

வேலைத்தளத்தில் உயிரிழந்தால் 20 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகை....


வேலைத்தளத்தில் அல்லது கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு தற்பொது வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பம் முழுமையாக நிர்க்கதியற்று இருக்கும் சந்தர்ப்பதில் 5 இலட்சம் ரூபா நட்டஈடு எந்த விதத்திலும் போதுமானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் நிலுவையில் உள்ள தொழிலாளர் நட்டஈட்டு வழக்குகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்....

தற்கால பாடத்திட்டங்களை புதிப்பிக்க கலந்துரையாடல் .....


தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்களை புதிப்பித்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக எதிர்வரும் காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் பிரதான பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்களுடன் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயர்தர வகுப்புக்களில் பல்வேறு பாடங்களுக்கு பாடப்புத்தகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்....

பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதுபின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு சா்வதேச மருத்துவ நிபுணா்களும், உள்நாட்டு மருத்துவக் குழுவினரும் ஒருங்கிணைந்து சிகிச்சையளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு...

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட   பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வெண்டிலேட்டா், எக்மோ உதவியுடன் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளது. உள்நாட்டு மருத்துவ நிபுணா்கள் மற்றும் சா்வதேச நிபுணா்களுடன் ஒருங்கிணைந்து, எம்ஜிஎம் மருத்துவக் குழுவினா் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனா். அவரது முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேலும்....

IPL 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11.........

Add caption


IPL 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனத்தைத் தெரிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 முடிவடைகிறது. டுபாய், அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 போட்டிகள் நடைபெறுகின்றன.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த இராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா்.

இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன இராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் விளம்பரதாரராக சீன நிறுவனமான விவோ தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து ஐபிஎல் 2020 போட்டிக்காக பிசிசிஐயும் விவோ நிறுவனமும் தங்களுடைய கூட்டணியை ரத்து செய்வதாக அறிவித்தன. இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரரைத் தேடும் பணியில் இறங்கியது பிசிசிஐ.

டாடா குழுமம், அன்அகாடமி, டிரீம் 11 ஆகிய நிறுவனங்கள் ஐபிஎல் போட்டிக்கான புதிய விளம்பரதாரராக இருக்க விருப்பம் தெரிவித்து பிசிசிஐக்கு விண்ணப்பம் அளித்தன.

இந்நிலையில், ஐபிஎல் 2020 போட்டியின் புதிய விளம்பரதாரராக டிரீம் 11 நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார். ரூ. 222 கோடி வழங்க டிரீம் 11 நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ தேர்வு செய்துள்ள டிரீம் 11 நிறுவனம் நான்கு மாதங்கள் 13 நாள்களுக்கு ஐபிஎல் 2020 விளம்பரதாரராகச் செயல்படும்.

மேலும்....

29 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை.....


இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில், நேற்று (வியாழக்கிழமை) புதிதாக 68 ஆயிரத்து 507 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் புதிதாக 981 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 29 இலட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் 21 இலட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை 6 இலட்சத்து 91 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்....

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

ஆய்வுக்கட்டுரைகள்

சினிமா செய்திகள்

விபத்து செய்திகள்

தொழிநுட்பம்

மருத்துவ உணவு

மகளீர் பக்கம்

ஆண்களுக்கானவை

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups