Home » » மலச்சிக்கலைக் குணப்படுத்த

மலச்சிக்கலைக் குணப்படுத்த


  • நீர் வறட்சி மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக திரவ உணவுகள் வறட்சியைத் தடுப்பதற்கு உதவும். ஆனால் காபி, தேநீர் மற்றும் மது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
  • தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலை விரட்டலாம்.
  • கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும்.
  • எலுமிச்சை சாறு 5 மி.லி உடன் ஒரு சிட்டிகை உப்பு, 300 மி.லி வெந்நீர் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும். உடல் உற்சாகம் பெரும்.
  • எள் விதையைப் பொடி செய்து பனை வெல்லத்துடன் கலந்து 4 முதல் 6 தேக்கரண்டி அளவிற்கு தினமும் உண்டுவர மலச்சிக்கல் தீரும்.
  • மோருடன் இஞ்சி, கல்உப்பு, பெருங்காயம் கலந்து உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.
  • தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை தூள் செய்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
  • இரவு வேளைகளில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர மலச்சிக்கல் சரியாகும்.
  • குடல், இரத்தம் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி மலச்சிக்கலையும் போக்கும்.
  • உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும்.
  • மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
  • வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கிசாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
  • நிறைய பச்சைக் காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல மருந்து.
ஆதாரம்: சிறகு இதழ்
Share this article :

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

Yoga

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. life is a beautiful gift of god - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups