Home » » தக்காளி: காய்கறிப் பயிர்கள்

தக்காளி: காய்கறிப் பயிர்கள்


இரகங்கள்: கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3,அர்கா அப்ஜித், அர்கா அஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன்,அர்கா விசால்,அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.­

த.வே.ப.க தக்காளி வீரிய ஒட்டு கோ-3
HN2=CLN2123A வின் வீரிய ஒட்டு.மகசூல் 96.2 டன் \எக்டர்.பயிரின் வயது 140-145 நாட்கள்.பயிர் பாதி நிர்ணயிக்கப்பட்டு (90-95 செ.மீ) மற்றும் அதிக அடர்த்தி நடவு முறைக்கு உகந்தது.பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவு, குழுக்கள் 3-5 ஆகவும் அதிக விளைச்சல் இலைசுருள் வைரசிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டதுடன், வேர் முடிச்சு நுாற்புழுவிற்கு எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

கோ.டி.எச் 2 (2006)
வீரிய ஒட்டானது LCR 2\CLN 2123A. இது இலை சுருள் வைரசிற்கு எதிர்ப்புத் திறன் கொண்டது மற்றும் எவ்வித பூச்சிகொல்லியும் தெளிக்காமல் 90.2 டன்\ எக்டருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பழங்கள் வட்டமாகவும், மிதமான அளவுடனும் பழுக்காத பழங்கள் வெள்ளையான பச்சை நிறத்துடனும், பழுத்த பழங்கள் நல்ல சிவப்பு நிறத்துடன் காணப்படுவதுடன், 3-5 பழங்கள் குழுக்களாக காணப்படும்.

கோ.டி.எச் 1 (1998):
வீரிய ஒட்டானது IIHR 709\ LE 812.மகசூல் 95.9 டன்/ எக்டர்.வயது 115 நாட்கள்.பழத்தின் அமிலத்தன்மை (0.61%)

பி.கே.எம் 1:
அண்ணான் ஜீயின் தூண்டப்பட்ட சடுதி மாற்றம்.பழம் தட்டையாக உருண்டையாக பச்சை தோல் முகப்பாகவும் நீண்ட தொலைதூர பயணத்திற்கு ஏற்றதாகவும் உள்ளது.மகசூல் 30-35 டன்/ எக்டர்.வயது 135-137 நாட்கள்.

கோ 1 (1969)
கல்யாண்பூர் இரகத்திலிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. பாதியளவு நிர்ணயிக்கப்பட்ட இரகம், பழமையனது எந்த வரிப் பள்ளமும் இல்லாமல் வட்டவடிவில் சிவப்பு நிறத்தில் உள்ளது. மகசூல் 25டன்/ எக்டர். இதன் வயது 135 நாட்கள்.

கோ 2 (1974)
இது ரஷ்ய முன்னோடிடியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்படாத பூத்தல் வகை. சராசரி பழ எடை 50-60 கி. பழங்கள் தட்டையாகவும், 4-5 பள்ளங்கரைக் கெண்டது. மகசூல் 28-30 டன்/ எக்டர். பயிரின் வயது 145 நாட்கள்.

கோ 3( 1980)
இது கொ1 இரகத்தின் துண்டப்பட்ட சடுதிமாற்ற இரகம். நிர்ணயிக்கப்பட்டஇரகம், நெருக்க நடவு ( 30x30 செ.மீ ) உகந்தது. கொத்துகொத்தாக காய்க்கும் வகை. மகசூல் 40 டன்/ எக்டர். வயது 100-105 நாட்கள்.

பையூர் 1:
இரகமானது பூசாரூபி மற்றும் கோ 3 ஐ இனக்கலப்பு செய்வதன் மூலம் கிடைக்கப்பெற்றது. மானாவாரி பயிருக்கு உகந்தது. மகசூல் 30 டன்/ எக்டர்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை..
தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவும் ஏற்றது. மண்ணின் காரத்தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்க வேண்டும். வெப்ப நிலை 210முதல் 240 செ. கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.

விதைக்கும் காலம்                                                                                                                                                                           

ஜீன்- ஜீலை, நவம்பர்-டிசம்பர், பிப்ரவரி-மார்ச்.


நடும் பருவம்

அக்டோபர்-நவம்பர், பிப்ரவரி-மார்ச், மே-ஜீன்.


விதையும் விதைப்பும்


விதை அளவு

எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.


விதை நேர்த்தி

ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கெண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 ச.மீ வரிசை இடைவெளியில் விதைக்க வேண்டும்.பிறகு மணல் கொண்டு மூடிவிட வேண்டும்.


நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களில் ஒரு பக்கத்தில் நடவேண்டும்.நடுவதற்று முன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

நிர்வாகம்

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பெறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை


அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 25 டன் தழைச்சத்து 75 கிலோ மணிச்சத்து 100 கிலோ சாம்பல் சத்து 50 கிலோ போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோஇடவேண்டும்.நட்ட 30ம் நாள் தழைச்சத்து 75 கிலோ இட்டு மண் அணைக்கவேண்டும்.நாற்று நட்ட 15ம் ட்ரைகோன்டால் 1பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்.இவ்வாறு தெளிப்பதினால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.


களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

ஒரு லீட்டர் புளுகுளோலின் மருந்தை 500 ரீட்டர் நீரில் நன்றாகக் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் நிலத்தில் தெளித்து நீர்ப் பாய்ச்சி பின்னர் நாற்றுக்களை நடவேண்டும்.நாற்று நட்ட 30ம்நாள் ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.


ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

காய்ப்புழு மற்றும் புரொடீயாப் புழுவைக் கட்டுப்படுத்த

1.     இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.
2.     தாக்கப்பட்ட பழங்களை பறித்து அழிக்க வேண்டும்,வளர்ந்த புழுக்களையும் அழிக்க வேண்டும்.
3.     ட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50,000 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருனாதாரச் சேதநிலை அறிந்துவிட வேண்டும்.
4.     காய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்க வேண்டும்.
5.     புரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.                                                                                                                           

வேர் முடிச்சு நூற்புழு
கார்போபியூரான் குருளை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.

நோய்கள்

நாற்று அழுகுதல்
விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு அல்லது கேப்டான் 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நாற்றாங்காலில் நீர் தேங்கக்கூடாது. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர்  தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை காத்திகளில் ஊற்ற வேண்டும்.
இலைச்சுருட்டு நச்சு நோய்
இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்ளில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக்கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது  மோனோகுரோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.


இலைப்பேன்கள்

இது தக்காளியில் புள்ளி வாடல் நேயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.

அறுவடை

மகசூல்
135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள்.

கோ.டி.எச் 1 வீரிய ஒட்டுத்தக்காளி
முன்னுரை
பருவம்
மே-ஜீன்
தக்காளியின் உயர் விளைச்சல் இரகங்கள் ஒரு எக்டருக்கு 30 முதல் 40 டன் வரை மகசூல் தரவல்லது. ஆனால் வீரிய ஒட்டு இரகங்களோ 90-100 டன் வரை மகசூல் தருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இருந்து கோடிஎச் 1 என்ற வீரிய ஒட்டுத் தக்காளி இரகம் வெளியிடப்பட்டது. சராசரியாக இந்த இரகத்தில்  இருந்து 90-96 டன் வரை மகசூல் பெறலாம். எனினும் கோடைகை்காலத்திற்கு இந்த இரகங்கள் உகந்தது அல்ல. எனவே கோடையில் பயிர் செய்யக்கூடாது.
சிறப்பியல்புகள்
·         பழங்கள் சற்றே நீண்ட உருண்டையாகவும் நடுத்தர எடையுடனும் (50 கிராம்) காணப்படும்.
·         கொத்துக்கொத்தாக காய்க்கக்டியது.
·         பழங்கள் நல்ல புளிப்புடையவை.
·         செடிகளை 1 மீட்டர் உயரமுள்ள குச்சிகள் வைதை்துக் கட்டி நிறுத்தவேண்டும்.
·         60x45 செ.மீ இடைவெளி போதுமானது.

விதைக்கும் பருவம்
மே-ஜீன், அக்டோபர்-நவம்பர்

விதையளவு
எக்டருக்கு 159 கிராம்

விதையும் விதைப்பும்
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திரம் அல்லது 4 கிராம் ட்ரைக்கோடெர்மா என்ற பூசணம் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே கலந்து வைக்க வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பாக 150 கிராம் அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்க வேண்டும்.

நாற்றாங்கால்
தெழுஉரம், மணல், செம்மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து மேட்டுப்பாத்திகளை நிழலான பகுதியில் அமைக்கவேண்டும். இப்பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் கோடுகள் கிழித்து அதில் ஒவ்வொரு விதையாக விதைக்கவேண்டும். அல்லது சிறிய பிளாஸ்டிக் கோப்பைகளில் மண் கலவையை நிரப்பி அதில் ஒரு கோப்பைக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்த தாமிர ஆக்சி குளோரைடு என்ற மருந்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் என்ற விககிதத்தில் கலந்து விதைகளை முளைத்துவரும் பொழுதும், பின்பு 7 நாட்கள் கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் பொழுதும், பின்பு 7 நாட்கள் கழித்தும் ஊற்றவேண்டும். விதைக்கும் போது சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் காபோஃபியான் குருணை மருந்தினை இடவேண்டும்.
நிலம் தயாரித்தல்

60 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். பார்களின் இடையே நீர்ப்பாசனம் செய்து  25 நாள் வயதுள்ள நாற்றுக்களை வேர்களைச் சுற்றியுள்ள மண்ணுடன் தோண்டி எடுத்து பார்களின் ஒரு புறம் 45 செ.மீ இடைவெளியில் நடவு கெய்ய வேண்டும்.


நீர் நிர்வாகம்
நடவு செய்து 3ம் நாளும் அதன் பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப்பாய்ச்சவேண்டும்.களை கட்டுப்பாடு மற்றும் பின் செய்நேர்த்தி நடவு செய்த 30ம் நாள் 1 மீட்டர் உயரமுள்ள மெல்லிய மூங்கில் குச்சிகளைசெடிகளைின் அருகில் நட்டு செடிகள் தரையில் சாய்ந்து விடாதவாறு கட்டவேண்டும். நடுத்தண்டில் தரையிலிருந்து 20 செ.மீ வரையில் முளைத்து வரும் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து
அடியுழவின் போது எக்டருக்கு 26 டன் தொழு உரமிட வேண்டும்.  நடவு செய்யும் முன்பு எக்டருக்கு 2 கிலோ (10 பாக்கெட்) அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து பார்களின் பக்கத்தில் இடவேண்டும். பின்பு எக்டருக்கு  100 கிலோ தழைச்சத்து, 250 கிலோ மணிச்சத்து, 250 கிலோ சாம்பல் சத்து என்ற விகிதத்தில் உரங்களை இடவேண்டும். 10 கிலோ போராக்ஸ் மற்றும் 50 கிலோ துத்த நாக சல்பேட் ஆகியவற்றை அடியுரமாக இடவேண்டும்.


மேலுரம்
1.     நடவு செய்த 30ம் நாள் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு மண் அனைத்து நீர் பாய்ச்சவும்.
2.     நடவு செய்த 60ம் நாள் மீண்டும் எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து இட்டு, மண் அனைத்தும் நீர் பாய்ச்சவும்

உரப்பாசனம்
கலப்பு இரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்குஎ200:250:250 கிகி ஆகும். இதில் 75% மணிச்சத்தை (187.5கிகி மணிச்சத்து 1172 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:62.5:250 கிகி உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒருமணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.

ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு

1.     நடவு செய்த 7 நாட்கள் கழித்து கார்போபியூரான் குருணையை எக்டருக்கு 7 கிலோ என்ற அளவில் இட்டு சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.
2.     மிதைல் டெமட்டன் அல்லது மோனோ குரோட்டோபாஸ் எக்டருக்கு 500மில்லி மருந்து தெளித்து இலைபேன் மற்றும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.
3.     இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1கிலோ ஜீனாப் அல்லது மேன்கோசெப் மருந்து தெளிக்கவேண்டும்.
4.     காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 1.25 லீட்டர் எண்டோசஃல்பான் மருந்து அல்லது 1.25 கிலோ கார்பரில் நனையும் தூள் இதில் ஒன்றைத் தெளிக்க வேண்டும்.

அறுவடை
தக்காளிப் பழங்கள் சிகப்பாக மாற ஆரம்பிக்கும் பொழுது அறுவடை செய்ய வேண்டும்.Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups