Home » » சிறுகிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு..

சிறுகிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு..


சிறுகிழங்கு சேம்பு



இரகங்கள்:கோ 1 மற்றும் தாரா..


மண் மற்றும் தட்பவெப்பநிலை: நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் பூமி ஏற்றது.வெப்ப மற்றும் மிதவெப்பப் பிரதேசம் சாகுபடிக்கு ஏற்றது.நிழலான இடத்தில் நன்கு வளரும்.

பருவம்: யூலை  - ஆகஸ்ட்


நிலம் தயாரித்தல்
 நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்தவேண்டும்.கடைசி உழவின்போது ஏக்கருக்கு 25 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும்.

விதையும் விதைப்பும்
 60 செ.மீ இடைவெளியில் நடுவதற்கு வரப்பு கட்டவேண்டும்.முளைவிட்ட கிழங்குகளை மார்ச் ஏப்ரல் மாதங்களில் 20-30 செ.மீ இடைவெளிவிட்டு பாத்திகளில் நடவேண்டும்.30-40வது நாளில் கொடிகளைக் கிள்ளி எடுக்கவேண்டும்.நாற்றாங்காலில் நிழல் தரம் வாழை போன்ற மரங்களை நடுவதுடன் இளஞ்செடியின் அடிபாகத்தில் காய்ந்த இலைகளைப் போடவேண்டும்.செடிகள் முளைக்கும் வரை நீர் பாய்ச்சுதல் வேண்டும்.ஆனால் நீர் தேங்கக்கூடாது.நடுவதற்கு இளந்தண்டுகள் ஒரு மாதத்தில் கிடைக்கும்.இந்தத் தண்டுகளை 10 செ.மீ நீளத்தில் இரண்டு அல்லது மூன்று கணுக்கள் இருக்குபடி எடுத்து நடவேண்டும்.

நீர் நிர்வாகம்
 நட்ட மூன்றாம் உயிர்தண்ணீர் விடவேண்டும்.பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
நட்டு இரண்டு மாதங்கள் கழித்து ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து 60 கிலோ மணிச்சத்து 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசாயன உரங்களை இடவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
 நட்ட பின்பு 2அல்லது 2 முறைகளை எடுக்கவேண்டும்.நட்ட 2 மாதங்கள் கழித்து மண் அணைக்கவேண்டும்.மண் அணைக்கும் போது 2 கிலோ அசோஸ்பைரில்லம்.இடவேண்டும்.
அறுவடை
இலைகள் மஞ்சலாகி உதிரும் போது கிழங்குகளை செய்யவேண்டும்.
மகசூல்: ஏக்கருக்கு 120 நாட்களில் 15 முதல் 20 டன் கிழங்குகள்.
                                                              
நன்றி

Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups