Home » » மருத்துவ உணவு-அகத்தி கீரை..

மருத்துவ உணவு-அகத்தி கீரை..

  • அகத்தி கீரை = அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது. 

  •  இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.

  •  குழந்தை பெற்ற தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். 

  •  கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும். 

  • அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். 


  •  இந்த அகத்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.

  •   இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும். 

  • வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும். 

  • அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும். 

  • வேறு மருந்து சாப்பிடும்போது இக்கீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது. 
 
  • இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம். 
 
  • இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது.

Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups