Home » » தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இதுவரையில் 4927 பேர் உயிரிழப்பு.....

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! இதுவரையில் 4927 பேர் உயிரிழப்பு.....


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 994 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்ட தகவலில் ஒரேநாளில் ஐயாயிரத்து 994 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மொத்த பாதிப்பு இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6 ஆயிரத்து 20 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 38 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 119 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை மொத்தமாக நான்காயிரத்து 927 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups