Home » » நான்காவது தடவை பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஸ..

நான்காவது தடவை பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஸ..

 


நான்காவது தடவை பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று (09) பதவிப் பிரமாணம் செய்தார். இலங்கையின் 13வது பிரதமராக மஹிந்த அவர்கள் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது..

களனி ரஜமகா விகாரையில் புதிய பிரதமரின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திர அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சுப வேளையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவிப் பிரமாணம் செய்தார்.பின்னர் ஜனாதிபதியுடன் விகாரைக்கு சென்று புதிய பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் குருநாகலில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்று சாதனை வெற்றியை பதிவு செய்தார். இலங்கை வரலாற்றில், வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஸ, 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக ஆட்சியமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தொழில் அமைச்சராக செயற்பட்டார்.

அதன் பின்னர் கடற்றொழில் அமைச்சராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் பல சக்திகளையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை ஸ்தாபித்து மீண்டும் ஆட்சியமைத்ததன் ஊடாக 2004 ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ இலங்கையின் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Share this article :

உள்ளூர் செய்திகள்

பாரத செய்திகள்

உலக செய்திகள்

கல்வி

விளையாட்டுச்செய்திகள்

புலம்பெயர் செய்திகள்

அரசியல்

ஏனைய செய்திகள்

 
Copyright © 2014. Thentral 🌍 Tamil Online News, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups